சரத்பாபுவுக்கு அன்புடன் சில எச்சரிக்கைகள்!

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சரத்பாபு பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இந்த சுட்டிக்கு சென்று அவர் பற்றி மேலும் தெரிந்து கொண்டு தொடர்ந்து வாசிக்கவும். எனக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. தொண்டு செய்ய நினைக்கும் எல்லோருக்கும் ஏன் எடுத்த எடுப்பிலேயே பெரும் பதவி தேவைப்படுகிறது என்று தெரிவதில்லை. விஜயகாந்த் ஆகட்டும் அல்லது சரத்பாபு ஆகட்டும்… பதவியில் இருந்தால் தான் தொண்டு செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம். பதவிக்கு வந்து [...]

நான் கடவுள் – தமிழ்த் திரை விமோசனம்

என் வலைத்தளத்தில் நான் இதுவரை திரைப்படங்களைப் பற்றி எழுதியதில்லை. அப்படி எழுதத் தூண்டும் அளவுக்கு எந்தப் படமும் என்னைப் பாதிக்கவில்லை. பொதுவாக சில திரைப்படங்கள் நம்மை மகிழ்வித்தாலும் நம்மைப் பாதிப்பதில்லை (வில்லு, குருவி போன்ற படங்கள் இதில் எந்த ரகத்திலும் சேருவதில்லை என்பது வேறு விஷயம்). திரைப்படம் என்பது ஒரு கதை நிகழும் சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் கலை. இது வரை நான் பார்த்த படங்களிலேயே நான் கடவுள் தான் அந்த [...]

என் தாய் எழுதிய கவிதை!

இதோ, என் தாய் எழுதிய கவிதை. இரண்டாம் வகுப்பே படித்திருந்தாலும், இந்த 62 வயதிலும் தன் உள்ளக்கிடங்கில் குடியிருக்கும் அம்மனை நினைத்து, பக்தியைத் தோய்த்து எழுதியுள்ளார். இது இவருக்கு முதல் கவிதையும் கூட. மஞ்சமாதா! எங்கள் மனக்கவலை நீக்கிடுவாள். அம்மா! நீ பூமியை காக்கும் தேவி. அம்மா! நாங்கள் உன் புகழைப் பாடிடுவோம். அம்மா! உன் சந்நிதிக்கு வருவோருக்கு செளபாக்கியம் தந்திடுவாய். அம்மா! அவள் மஞ்சள் பொடியை அள்ளி அள்ளிக் கொடுப்பாள். அம்மா! நல்ல நல்ல வரங்கள் [...]

டாலர் தேசம் – ஒரு பார்வை

வழக்கம் போல நீண்ட இடைவெளி. மீண்டும் ஒரு சரித்திரப் புத்தகத்தை கையில் எடுத்து பாதி முடித்தும் விட்டேன். இதற்கு முன் இந்திய அரசியல் சரித்திரத்தின் ஒரு பகுதியை (நள்ளிரவில் சுதந்தரம்) அமெரிக்க + ஐரோப்பிய எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் படித்தேன். இந்த முறை அமெரிக்காவின் முழு அரசியல் சரித்திரத்தை, பா.ராகவன் என்ற இந்தியரின் எழுத்தில் டாலர் தேசம் என்ற புத்தகத்தில் படித்து வருகிறேன். வலிமை மிக்க, கவர்ச்சியான பெயரோடு வந்திருக்கும் இந்த புத்தகம், படிக்க மிக எளிமையாக (சில [...]

“எனது சுயசரிதை” – நடிகர்திலகம் சிவாஜி கணேசன்

நமது வாழ்க்கையில் சில பேரால் மட்டுமே மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட மிக சிலரில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரும் ஒருவராகும். என்னை யாரும் பாதிக்கமுடியாது என்று கர்வத்துடன் என்னை நானே பலமுறை ஏமாற்றிக்கொண்டதுண்டு. அதில் நான் கண்ட மிகப்பெரும் தோல்வி சிவாஜியிடம்தான். அவரின் மரணத்தன்றுதான் என்னுள் அவரின் பிம்பம் ஒளிந்திருப்பதை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அவரின் திருவாயாலேயே அவரது சுயசரிதையை சொல்லவைத்து எழுதியுள்ளனர். பொதுவாக இந்த முறையில் சுயசரிதை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. [...]

  • RSS என் இணையத்தளத்தில்