அனைவருக்கும் வணக்கம்!
அனைவருக்கும் வணக்கம்!
என் இனிய நண்பர்களே! என் நீண்ட நாளைய எண்ணமான என் கருத்துக்களைப் பதிவு செய்யும் களம் இன்று நிறைவேறுகிறது. எண்ணங்களைப் பதிவு செய்வது மனதிலுள்ள குப்பைகளை அகற்றுவது போலத் தான். எண்ணங்கள் எழுத்தில் வரும்பொழுது அது அதிக முக்கியத்துவமும் பெற்றுவிடுகிறது. நமது சிந்தனையைத் தூண்டி சில நேரம் எழுதவந்த கருத்தை மறு பரிசீலனை செய்யக்கூட வைத்துவிடுகிறது. அதுவே இந்த வலைப்பூவின் சாதனை எனக்கூட சொல்லலாம்.
இங்கு நான் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றியே பேசப்போகிறேன். அந்த புத்தகங்களைப் பற்றிய என் மன நிழல்களை இங்கு பதிவு செய்யவிருக்கிறேன். இந்த பதிவுகள் உங்களையும் அந்த புத்தகங்களைப் படிக்கத் தூண்டக்கூடும். அப்படி நிகழ்ந்தால் அதுவும் கூட இந்த வலைப்பூவின் நல்லவிதமான பக்கவிளைவு என்று கூறலாம்.
என் எழுத்துத் தமிழிலுள்ள குறைகளை விரைவில் சரி செய்து விடுகிறேன். அதுவரை மன்னிப்புக்கோரி மற்றும் வாழ்த்து வேண்டி,
அன்புடன்
த.கருப்புசுவாமி
Best wishes for your pathivukal
Vaarungal nanbare!!
Best wishes for your future pathivugal…
மிகவும் பயனுள்ள கருத்துக்களை படித்து அதை மற்றவர்களும் படிக்கச் செல்வது மிக பயனள்ளது இன்னும் இதைபோல் தெடரவும்