சம்பளப் போராட்டம் அல்ல, ஒரு சுயமரியாதைப் போராட்டம்!
மறுபடியும் ஒரு குட்டிக்கதை…. அதே புத்தகம்…
இது நோபல் பரிசு வென்ற ஜகதீஷ் சந்திரபோஸ் பற்றியது… அப்போது அவர் லண்டனில் தன் படிப்பு முடித்து இந்தியா திரும்பியிருந்தார். அது வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலம். அவருக்கு கல்கத்தா மாநிலக்கல்லூரியில் அறிவியல் துறை பேராசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. இவரும் அந்த பணியில் சேர்ந்தார். இத்தனை உயர்ந்த பதவிகளில் அப்பொழுது பெரும்பாலும் வெள்ளைக்காரர்களே இருந்து வந்தனர். அதனால் கல்லூரி நிர்வாகம் மற்றும் நிறுவனருக்கு இந்தியரான போஸைப் பிடிக்கவில்லை. மற்றவர்களை விட அவருக்கு குறைந்த சம்பளம் அளிக்கப்பட்டு சலுகைகளும் மறுக்கப்பட்டன. அவரை அவமானப்படுத்தவே நிர்வாகம் இப்படி நடந்துகொண்டது.
“இந்தியர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல!” என்று நிர்வாகத்திற்கு உணர்த்த விரும்பிய போஸ், சம்பளம் வாங்கவேயில்லை. அதிர்ந்து போன நிர்வாகம், போஸை அழைத்து எச்சரிக்கை செய்தது. போஸ் “தனக்கு நியாயமாக என்ன சம்பளத்தைத் தர வேண்டுமோ அதைத் தர வேண்டும்! வெள்ளையர்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தருவதற்கும், தான் கல்வி கற்றுத் தருவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை! எனவே கல்லூரி நிர்வாகம் மற்ற பேராசிரியர்களுக்கு நிர்ணயம் செய்துள்ள அதே சம்பளத்தைத் தந்தால், தான் சம்பளத்தை வாங்கத் தயார்!” என்று நெத்தியடியாக பதிலளித்தார். இப்படியே சில காலம் சென்றது. நிர்வாகம் சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் போஸை அழைத்து எச்சரிப்பதும், போஸ் தனது போராட்டத்தில் உறுதி காட்டுவதும் தொடர்ந்தது. கல்லூரி நிர்வாக உயர்மட்டக்குழுவும் போஸுக்கு உரிமையை மறுத்தது. இப்படியே எவ்வளவு காலம் போவது? போஸின் குடும்பம் வறுமையில் துவளத் துவங்கியது. போஸின் குடும்பம் நகருக்கு வெளியே கங்கை நதிக்கு அப்பால் ஒரு குடிசைப் பகுதிக்குக் குடி பெயர்ந்தது. படகு மூலம் கங்கையைக் கடந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நேரத்தில் அரசு உயர் அதிகாரிகளின் தலையீட்டால், ஒரு விடிவு காலம் பிறந்தது. கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்த அதிகாரிகள், ஜகதீஷ் சந்திர போஸுக்குக் கிடைக்க வேண்டிய மூன்று ஆண்டு நிலுவைத் தொகையைப் பெற்றுத் தந்ததுடன், மற்ற உரிமைகளையும் மீட்டுத் தந்தனர். அவரது போராட்டம் வென்றது.
இது ஒரு படித்த மேதையின் சம்பளப் போராட்டம் அல்ல, ஒரு சுயமரியாதைப் போராட்டம்! படித்த நம்மில் பலருக்கு சுயமரியாதை, அறவழிப்போராட்டம் போன்ற உணர்வுகள் அற்றுப் போயிருக்கும் இந்தத் தருணத்தில் இந்த கதை அவசியம் என்று தோன்றுகிறது…. என்ன சரியா?
இப்பதிவு மிக முக்கியமானது.
நன்றிகள் நண்பரஏ
its very nice to read this….but the reality is ….it is still not changed…western degrees get more pay…westerners get the best pay…even in our own swadesi government sector…like ongc…cricket board etc….
Nice Story Swamy