புதிய புத்தகங்கள்….

இன்று இந்திய சுதந்தரநாள்! நேற்று சென்னை கன்னிமரா நூலகத்தின் பின்புறம் உள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இதுபோன்ற ஒரு முயற்சிக்கு அரசுக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். அதுவும் குறிப்பாக அந்த காட்சியகத்தின் தலைமை அலுவலர்! நான் தேடிய புத்தகம் ஒன்று கிடைக்கவில்லை (ஜெயமோகனின் விஷ்ணுபுரம்). அந்த தலைமை அலுவலர், சிரத்தையெடுத்து பல பதிப்பகங்களுக்குத் தொலைபேசி மூலம் பேசி, அடுத்த வாரம் அந்த புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இப்படிப்பட்ட கடமையுணர்வு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது.

இதுவரை நாவல்/கதை படித்திராத நான் முதன்முதலில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படிக்க முடிவு செய்திருக்கிறேன். இதற்கு காரணம் மற்ற வலைப்பூக்கள் எனலாம். அப்புறம்…. நான் வாங்கிய புத்தகங்கள்… சில குழந்தைப்புத்தகங்கள்… எனக்கு “நள்ளிரவில் சுதந்தரம்”, “கடிதங்கள் – சுவாமி விவேகானந்தர்” மற்றும் “விக்கிரமாதித்தன் கதைகள்”… இவைகளில் “நள்ளிரவில் சுதந்தரம்” இந்திய விடுதலை மற்றும் பிரிவினையின் போது நடந்தவைகளைப் பற்றியது. என் நண்பர் ஜெயசிங் இதைப் பற்றி நல்ல மதிப்புரை தந்திருப்பதால் மிக ஆர்வத்துடன் வாங்கியிருக்கிறேன். சுவாமிஜியின் புத்தகங்கள் படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் அவரது கடிதங்கள் புத்தகமும், ஜாலியாகப் படிக்க விக்கிரமாதித்தன் கதைகளும் வாங்கியிருக்கிறேன்.

விரைவில் இந்த புத்தகங்கள் பற்றிப் பதிகிறேன்….

மறுமொழி இடுக

  • RSS என் இணையத்தளத்தில்