நள்ளிரவில் சுதந்தரம்…
மீண்டும் ஒரு பெரிய இடைவெளி…..! ஒரு வழியாக “நள்ளிரவில் சுதந்தரம்” படித்து முடித்து விட்டேன். “ஒரு வழியாக” என்பது சலிப்பாக சொல்லும் வார்த்தை அல்ல. ஒரு பூரணமான நூலைப் படித்து முடிக்க எடுத்துக்கொண்ட கால அளவை சொல்லுவது அது! நூலில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் இங்கிலாந்திடமிருந்து இந்தியாவுக்கு கை மாறிய அந்த கால கட்டத்தை (1946-1948) அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது. இந்த நூலாசிரியர்களின் (ஆங்கில மூலம்: டொமினிக் லேப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் ) கடின உழைப்பை நூலின் ஒவ்வொரு வரியும் எடுத்தியம்புகிறது. நிறைய ஆதாரத்துடன் ஒவ்வொரு பாகமும் எழுதப்பட்டுள்ளது. மவுண்ட்பேட்டன் பிரபுவின் 30 மணி நேர பேட்டியே பிரதான மூலமாக அமைந்துள்ளது. இதைத் தவிர முக்கிய அரசு ஆலோசனைக் கூட்டக் குறிப்புகளும் (minutes of the meeting) இந்த நூலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.
இந்த நூலின் கதாநாயகனாக மவுண்ட்பேட்டன் பிரபு உருவகப்படுத்தப்படுகிறார். அதில் கொஞ்சம் நியாயமும் தெரிகிறது. ஆனால் ஆசிரியர், மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஒவ்வொரு நடவடிக்கையும் வலிய நியாயப்படுத்துவது கொஞ்சம் அதிகம் போல தெரிகிறது. மவுண்ட்பேட்டனின் வசீகரம் எந்த அளவுக்கு நம் இந்திய தலைவர்களை வசீகரித்தது என்பதும் அதனால் இந்திய அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களும் வேறு எங்கும் நாம் படித்திராதது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவைக் கைவிட இங்கிலாந்து முடிவெடுக்கிறது. அந்த முடிவை அமல்படுத்தும் பொறுப்பு மவுண்ட்பேட்டனுக்கு அளிக்கப்படுகிறது. மவுண்ட்பேட்டன் பதவியேற்கும்போது இந்தியாவில் இனக்கலவரம் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த இந்து-முஸ்லீம் இனக்கலவரத்தை அவர் எப்படி சமாளிக்கிறார், இந்திய-பாகிஸ்தான பிரிவினையில் அவரது பங்கு, இந்திய அரசியல் தலைவர்களுடன் அவருக்கு இருந்த உறவு போன்றவை சுவாரசியமாக, துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மைக் கதாநாயகன் மகாத்மா காந்தி தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்திய சுதந்தரப் போராட்டம் பற்றி பாடநூல்கள் நமக்கு சொல்லிய அளவுக்கு, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த மனிதாபிமானமற்ற இனப் படுகொலைகள் நமக்கு சொல்லப்படுவதில்லை. வரலாற்றின் மிகப் பெரிய இனப் படுகொலைகள் சர்வ சாதாரணமாக நடந்துள்ளன. முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக டெல்லியில் முட்டி மோதிக்கொண்டிருக்க இந்த மகாத்மா என்ற மாமனிதன் தன்னந்தனியாக மக்களிடம் அமைதியையும் அகிம்சையயும் போதித்துக் கொண்டிருந்திருகிறார். இப்போது நமக்கு இது ஏளனமாகத் தெரியலாம். ஆனால் அவர் அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டிருக்கிறார். இந்திய உளவு நிறுவனங்களின் கணிப்புப்படி மிகப் பெரிய கலவரம் நடக்கவிருந்த கல்கத்தா, மகாத்மா அங்கு சென்ற ஓரிரு நாளில் அமைதிப் பாதைக்கு சென்றதைப் படிக்கும் போது, மெய் சிலிர்த்தது உண்மை. இந்த அற்புதத்தை டெல்லியிலும் விடாப் பிடியான உண்ணாவிரதம் மூலம் நிறைவேற்றிக்காட்டினார். காந்தியை ஏன் மகாத்மா என்கிறார்கள் என்பதை இந்த நூல் படித்தப் பின் தான் முழுமையாக உணர்ந்தேன். இந்த நூலின் தொடக்க அத்தியாயங்கள் மகாத்மாவின் மீதான நல்லெண்ணத்தை அசைப்பது போலத் தோன்றியது. நூல் முடியும் போது என்னையும் அறியாமல் கனத்த மவுனம் என்னை ஆட்கொண்டது. மரணத்தை எதிர்கொள்வதிலும் தான் மகாத்மா தான் என்று நிரூபித்திருக்கிறார். மகாத்மாவின் மரணம் படிக்கும்போது என்னையும் அறியாமல் என் கண்கள் பனித்தன. அதன் பாதிப்பிலிருந்து மீள எனக்கு இரண்டொரு நாட்கள் தேவைப்பட்டன.
ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய அற்புதமான நூல். வழக்கம் போல வெளிநாட்டவர்கள் சொல்லி நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியிருப்பது அவமானகரமான விஷயம் தான். இந்த நூலைப் பற்றி இன்னும் அதிகம் எழுத ஆசை இருந்தாலும், தமிழனாகிய என்னால் தமிழில் இதற்கு மேல் உள்ளீடு (keying in) செய்ய இயலவில்லை என்பது நான் அவமானப்பட வேண்டிய விஷயம்.
மூலம்:
Freedom at Midnight by Dominic Lapiere & Larry Collins
நான் படித்த மொழிமாற்றம்:
- தலைப்பு: நள்ளிரவில் சுதந்தரம்
- ஆசிரியர்கள்: வி.என்.ராகவன் & மயிலை பாலு
- பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்குச் சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம், சென்னை – 600024.
தொ: 24815474
- விலை: ரூ. 250.00
நீங்கள் படித்தது தமிழ் மொழிமாற்றத்திலா? யார் மொழிமாற்றியது? எந்தப் பதிப்பகம்? என்ற தகவல் கிடைக்குமா? நன்றி.
நன்றி பத்ரி!
நூல் பற்றிய விவரங்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் பல தகவல்கள் நமக்கு இந்திய விடுதலை வரலாறு என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதில் கேட்டிராதவை. காட்டாக, காந்தியை கொல்வதற்கு தீட்டப்பட்ட திட்டமும், அதனை நிறைவேற்றியதும், ஐதராபாத் நிஜாம் முதலானோர் பற்றிய செய்திகள், காந்தியின் இறுதிச்சடங்கை நடத்த பிரிட்டிஷார் செய்த ஆயத்தங்கள்… நல்லதொரு புத்தகம் (நான் வாசித்தது ஆங்கிலப்பதிப்பு), சந்தேகமேயில்லை.
நான் படித்தது பிரெஞ்சு மூலப் பதிப்பு. ஆம், நான் கூறியதும் உண்மைதான். லாபியெர் மற்றும் காலின்ஸும் சேர்ந்து எழுதிய மற்றப் புத்தகஙளும் அப்படித்தான். அவை கூட்டு முயற்சிகளாகும். காலின்ஸ் ஆங்கிலத்தில் ஒரு அத்தியாயம் எழுதுவார். லபியெர் அதை பிரெஞ்சில் மொழி பெயர்ப்பார். அதே மாதிரி லாபியெர் பிரெஞ்சில் எழுதிய இன்னொரு அத்தியாயத்தை காலின்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். இப்படித்தான் இரு மொழிகளிலும் ஒரே வேகத்தில் புத்தகம் உருவாகும். இரண்டுமே மூல மொழிகள்தான். மற்றவையே மொழி பெயர்ப்பாகும். அவர்கள் எழுதிய மற்றப் புத்தகங்கள்: Is Paris burning? O Jerusalem, The last battle–>
கருப்புசாமி,
நன்கு எழுதியுள்ளீர்கள். நான் ஆங்கில மூல நூலை பல ஆண்டுகளுக்கு முன்பு படிக்க ஆரம்பித்து விட்டு விட்டேன். நீங்கள் எழுதியுள்ளதைப் படித்த பிறகு ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்க ஆவல் தோன்றுகிறது. முதல் வாய்ப்பில் வாங்கிப் படிக்க வேண்டும்.
அன்புடன்,
மா சிவகுமார்
Mr. Ma sivakumar
Mahathma gandhi endu sollappukira gandhiyai pattria ungalathu karuthukal pamarathanamanathu. neengal solluvathu poll Mr. Gandhi makkalodu makkalaka porattam nadathi kondirundhar. But he’s principles- ana, ovar thannudaiya ennathil “varunasirama kottpattai” vaithe pracharam seithar.
example: He is said “malam allum kulathil piranthavargal meendum athe thozhilai seiya thayanga koothu”
See: Duccumentry film of “parai”
sorry for mistakes, Mr.Samy Ph.d
Mahathma gandhi endu sollappukira gandhiyai pattria ungalathu karuthukal pamarathanamanathu. neengal solluvathu poll Mr. Gandhi makkalodu makkalaka porattam nadathi kondirundhar. But he’s principles- ana, ovar thannudaiya ennathil “varunasirama kottpattai” vaithe pracharam seithar.
example: He is said “malam allum kulathil piranthavargal meendum athe thozhilai seiya thayanga koodathu”
See: Duccumentry film of “parai”
I do agree with Ma.Sivakumar. Every grass root activist must read this book. But the most important thing is that one who reads this book( Freedom at Midnight) , must understand between the lines.
நான் இந்த நுலை மிக அவசரமாக படித்தேன் . ஆனாலும் இதே மீண்டும் மீண்டும் படிக்கச் தூண்டும் ஒரு நல்ல புத்தகம்
வணக்கம் தோழர்களே ,
எனக்கு இன்னும் இது போன்ற புத்தகங்கள் பெயர் வேண்டும்.
இது எனக்கும் என் சந்த்ததினர்க்கும் உதுவ்ம்.
நன்றி
நல்லேரவில் சுதந்திரம் இப்போதுthan படிக்க ஆரம்பிக்கிறேன். இந்த புத்தகத்தை தமிழில் மொழி peyartha ஆசிரியருக்கு நன்றி.