ராயபுரம் கடற்கரை….
இயற்கை அன்னையே! தாய் மடியென தஞ்சம் கொண்டோம், சேய் எங்களுக்கு தண்டனை ஏன்? ராட்சச அலைகளின் கோரத்தாண்டவம், உயிர் பறித்த உன் ஒய்யார ஆட்டம். கனவுடன், கடல் சென்ற மீனவ ஆண்கள், அவர்களின் நினைவுடன் அந்த பெண்கள், இவர்களின் நம்பிக்கைப் பூக்களாய் குழந்தைகள், அத்தனைப் பேரும் உனக்கு தாம்பூலமா? வாரி, சுருட்டி, முழுங்கி, பின் துப்பியதேன்? நான் மிதிவண்டி பழகிய காசிமேட்டுப் பாதை, கணக்கில்லா மீன்கள் குவியும் சந்தை, கடல் காற்றுக்காக பயணம் செய்த எண்ணூர் சாலை, [...]