“எனது சுயசரிதை” – நடிகர்திலகம் சிவாஜி கணேசன்
நமது வாழ்க்கையில் சில பேரால் மட்டுமே மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட மிக சிலரில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரும் ஒருவராகும். என்னை யாரும் பாதிக்கமுடியாது என்று கர்வத்துடன் என்னை நானே பலமுறை ஏமாற்றிக்கொண்டதுண்டு. அதில் நான் கண்ட மிகப்பெரும் தோல்வி சிவாஜியிடம்தான். அவரின் மரணத்தன்றுதான் என்னுள் அவரின் பிம்பம் ஒளிந்திருப்பதை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அவரின் திருவாயாலேயே அவரது சுயசரிதையை சொல்லவைத்து எழுதியுள்ளனர். பொதுவாக இந்த முறையில் சுயசரிதை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இந்த முறையில் நூலின் நாயகன் தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சிவாஜி போன்ற திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்த, நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதருக்கு இது பொருந்தவில்லை.

Sivaji Ganesan
சிவாஜியின் பிறப்பு, குழந்தைப்பருவம், நாடக ஆசையில் தன்னை அனாதை என்று கூறிக்கொண்டது, ராஜபார்ட் ஆசை, நாடகக் கம்பெனிகளில் பட்ட கஷ்டங்கள், சக கலைஞர்களுடன் கொண்ட நட்பு, பெரியார்-அண்ணா-கலைஞர்-எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களுடன் கொண்ட நட்பு மற்றும் மரியாதை, பராசக்தி என்ற திருப்புமுனை, அமெரிக்கப்பயணமும் அதன் பெருமைகளும், அரசியலில் ஏற்பட்ட அவமானங்கள், “ஒவர் ஆக்டிங்” என்ற விமர்சனம், தனது குடும்பம், பெரியாராக நடிக்க ஆசைப்படுவது (நிறைவேறாத ஆசை!) என்று திறந்த மனதுடன் தனது அனுபவங்களைக் கொட்டியுள்ளார்.
இந்த நூல் மிக எளிமையான நடையில் பாமரரும் படித்து புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்ந்த அச்சுத்தரம், முழுமையான தகவல்கள், சரியான அளவிலான புகைப்படங்கள், குறைந்த விலை மற்றும் நடிகர் திலகத்தின் கள்ளம் கபடமற்ற பேச்சு என்று புத்தகம் களை கட்டுகிறது. தொகுப்பாசிரியர் கேள்விகளைத் தொடுக்க, நடிகர் திலகம் பதில் அளிப்பதாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு: எனது சுயசரிதை
ஆசிரியர்: அமரர் சிவாஜி கணேசன்
தொகுப்பாசிரியர்: திரு. டி.எஸ்.நாராயணஸ்வாமி
பதிப்பு: சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்
25, பெஸன்ட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600014.
தொலைபேசி: 28350126/28350127
விலை: ரூ.135.00
// நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதருக்கு //
ஆம்.
அதுவே அவரது அரசியல் தோல்விக்கு ஒரு காரணம் எனலாம்.
சிவாஜியின் நடிப்பு என்பது நிஜத்திற்கு மாறுபடாத ஒன்று. வித்தியாசம் கண்டுபிடிப்பது என்பது சிரமம்.
நான் ஒரு செய்தி கேள்விப்பட்டதுண்டு. சிவாஜி அவர்களின் தாயார் மறைந்த போது அவர் கதறி அழுததை, ஒரு தமிழ் தினசரி, செய்தியாகப் போடும்போது சினிமாவில் அழுவதை விட சிறப்பாக அழுதார் என்று செய்தி வெளியிட்டதாம்.
இது எப்படி இருக்கு ?
நீண்ட இடைவெளிக்குப் பின் பதிவிட்டதற்கு நன்றி. ()
)–>
Great post.
மக்குசாமி வந்தார்கள் வென்றார்கள் படித்ததுண்டா இனூல் பற்றி அவரின் கருத்துகள் என்ன ? எனது கவிதைஹளை கூட இப் பகுதியில் தரலாமா? மாதிரிக்கு ஒன்று
எதிர்கால சந்ததிதிக்கு
உயர்ந்த கல்வி கற்றுத்தந்தாய்
நிறைய செல்வம் சேர்த்து வைத்தாய்
நல்ல சுழலை விட்டு வைத்தாயா?
தாய?
ராஜேஷ், வந்தார்கள் வென்றார்கள் படித்திருக்கிறேன். மசாலா தடவிய வரலாற்று நூல் அது
உங்கள் கவிதை நன்றாக உள்ளது. அதை விட சமுகம் மீதான அக்கறை உள்ளது. பிழைகளை திருத்தம் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள்!