என் தாய் எழுதிய கவிதை!
இதோ, என் தாய் எழுதிய கவிதை. இரண்டாம் வகுப்பே படித்திருந்தாலும், இந்த 62 வயதிலும் தன் உள்ளக்கிடங்கில் குடியிருக்கும் அம்மனை நினைத்து, பக்தியைத் தோய்த்து எழுதியுள்ளார். இது இவருக்கு முதல் கவிதையும் கூட.
மஞ்சமாதா! எங்கள் மனக்கவலை நீக்கிடுவாள்.
அம்மா! நீ பூமியை காக்கும் தேவி.
அம்மா! நாங்கள் உன் புகழைப் பாடிடுவோம்.
அம்மா! உன் சந்நிதிக்கு வருவோருக்கு செளபாக்கியம் தந்திடுவாய்.
அம்மா! அவள் மஞ்சள் பொடியை அள்ளி அள்ளிக் கொடுப்பாள்.
அம்மா! நல்ல நல்ல வரங்கள் தந்திடுவாள்.
அம்மா! மஞ்சமாதா வினைகளை ஓட்டிடுவாள்.
அம்மா! செல்வம் பெருக்கிடுவாள்.
அம்மா! எங்கள் குடும்பத்தைக் காத்திடுவாள்.
அம்மா! முத்து முத்துப் பல்லழகி முன்னின்று காத்திடுவாள்.
அம்மா! அவள் வீரமணிகண்டனுக்கு தங்கை.
அம்மா! நமக்கு மஞ்சமாதா துணை உண்டு.
அம்மா! அவள் ஐந்துமலைக்கு அதிபதியாய் இருப்பவள்.
அம்மா! கருப்பண்ணசாமி துணை உண்டு.
அம்மா! சங்கிலிகருப்பசாமி துணை உண்டு.
அம்மா! ஒத்தையடிப் பாதையில் ஆடி ஆடி வருவாள்.
அம்மா! இந்த பூமியைக் காக்கும் தேவி.
அம்மா! மஞ்சமாதாவே தேவி.
அம்மா! இருமுடி சுமந்து வருபவருக்கு வழித்துணையாக
பாடி பாடி வருவாள், அம்மா! அம்மா! அம்மா!- கவிராணி ராசம்மாள்.
மிக அருமை ….
இது உங்கள் அம்மா விற்கு ஆன்மீகதில் நிறைய ஞானம் இருப்பதை காட்டுகிறது …….மிக சந்தோசம்