சரத்பாபுவுக்கு அன்புடன் சில எச்சரிக்கைகள்!
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சரத்பாபு பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இந்த சுட்டிக்கு சென்று அவர் பற்றி மேலும் தெரிந்து கொண்டு தொடர்ந்து வாசிக்கவும்.
எனக்கு ஒன்று மட்டும் புரிவதில்லை. தொண்டு செய்ய நினைக்கும் எல்லோருக்கும் ஏன் எடுத்த எடுப்பிலேயே பெரும் பதவி தேவைப்படுகிறது என்று தெரிவதில்லை. விஜயகாந்த் ஆகட்டும் அல்லது சரத்பாபு ஆகட்டும்… பதவியில் இருந்தால் தான் தொண்டு செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம். பதவிக்கு வந்து விட்டால் நாம் மனது வைத்தால் எல்லாம் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகார வர்க்கத்தைத் தாண்டி நிலைத்து செய்ய உங்களின் பின்னால் மக்களிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்க வேண்டும் – எந்த ஒரு ஜனநாயக நாட்டிற்கும் இது பொருந்தும்.
சரத்பாபு-வை ஆதரிக்காதவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதற்கு பதில் இப்படி யோசிக்கலாம். இவரை பெரிதும் ஆதரிக்கும் ஊடகங்களும் மக்களும் தான் அப்துல் கலாமையும் ஆதரிப்பவர்கள். அப்துல் கலாம், குடியரசு தலைவர் பதவியில் இருந்தே எதுவும் சாதிக்க முடியாதவர் – படித்த, கறை படியாத, ஆங்கிலம் மற்றும் அறிவியல் தெரிந்த பெரும் மனிதருக்கே இந்த நிலை தான் நம் நாட்டில். இது நிதர்சனம். ஒரு எம்-பி பதவியில் இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவார் என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள் தனம் தான் என்று நான் கூறலாமா?
அடிப்படை பிரச்சனையே – தன் பொறுப்பை மற்றவர்கள் மீது தள்ளி விடும் மனோபாவம் தான். யாராவது தலைவராக வந்து நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கும் மன நிலை தான் இது. நடுத்தர படித்தவர்களின் இந்த மனநிலைக்கும், ரஜினி முதல்வராகி அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நம்மை உய்விப்பார் என்று அடித்தட்டு மக்கள் எதிர்பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இது போன்ற மாயை தான் வெகு ஜன ஊடகங்களின் வியாபார தந்திரம். கொஞ்ச காலம் முன்னாள் அது அப்துல் கலாம் மற்றும் நாராயண மூர்த்தி. இப்போது சரத் பாபு.
என்னைப் பொறுத்த வரை இவர்கள் முதலில் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள சிறு சிறு பொது பிரச்சனைகளை தீர்க்க முயலலாம். அதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெற சிறந்த வழி – நியாயமான வழியும் கூட. என்ன தான் கருணாநிதி போன்ற மூத்த தலைவர்களை அவர்களின் மோசமான சுயநல அரசியலுக்காக இப்போது வலைப்பூ எழுதும் பொடிசுகள் கேவலமாக பேசினாலும் அவரின் ஆரம்ப கால சொந்த ஊர் உழைப்பு தான் கண்ணை மூடிக் கொண்டு அவருக்கு ஓட்டுப் போடும் கூட்டத்தை சேர்த்து தந்துள்ளதை மறுக்க முடியாது.
“அவருக்கு நிர்வாகம் செய்ய தெரியும்” என்பது அரசியலுக்கு பொருந்தாது. ஒரு நிறுவனம் என்பது முழுக்க முழுக்க அவருக்கு முழு அதிகாரம் உள்ள ஒரு இடம். ஆனால் அரசியல் என்பது, மற்றவர்களுக்கு பெரும்பாலான அதிகாரம் உள்ள ஒரு இடம். இங்கு அவரது அதிகாரம் செல்லுபடியாகாது. நிர்வாகத் திறமை போதும் என்றால், நாட்டை ஒரு டாடா-விடமோ அல்லது நாராயண மூர்த்தியிடமோ கொடுத்து விடலாமே?
“முதல்வன்” போன்ற அரைவேக்காட்டுத்தனமான குப்பை திரைப்படங்கள் இது போன்ற மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேத்தியே பணம் சம்பாதிப்பது மட்டுமில்லாமல், இது போன்ற மூளை சலவையையும் ஜோராக செய்கிறது.
திரு. சரத்பாபு அவர்களே!
உங்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் என் வணக்கங்கள். உங்களைப் போன்றே வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து வந்தவன் என்பதால் அந்த வேதனைகளை, வலிகளை பெரிதும் உணர்ந்துள்ளேன்.
திரு. சரத்பாபு அவர்களே நீங்கள் தொடங்க வேண்டிய இடம் உங்கள் தெரு (கவுன்சிலர்), உங்கள் நகரம் அல்ல. நான் உங்களை எதிர்க்கவில்லை, அக்கறையுடன் எச்சரிக்கிறேன்! உங்களை உசுப்பேத்தி விடும் ஊடகங்கள் யாராவது நடிகை தற்கொலைக்கு முயன்றால் கூட உங்களை அந்தரத்தில் விட்டு விடும்.
மன்னிக்கவும், ஒரு வேளை நீங்கள் தோல்வி அடைந்தால், படித்தவர்களுக்கு யாரும் ஓட்டுப் போடுவதில்லை என்று பழி மக்களிடம் சென்று சேரும். படித்தவர்கள் மேலும் அரசியலுக்கு வருவதற்கு அது உகந்ததாக இராது. உங்களின் வெற்றி மிக முக்கியம், அதனால் உங்கள் பணியை வெற்றி வாய்ப்புள்ள இடத்திலிருந்து தொடங்க வேண்டுகிறேன்.
இந்தப் பதிவைப் படித்த பின்புதான் தங்களது வலைப்பதிவின் பெயரைப் பார்த்தேன்… மக்குசாமியின் உளறல்கள்
//ஒரு எம்-பி பதவியில் இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவார் என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள் தனம் தான் என்று நான் கூறலாமா?//
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல அவ்வாறு யாரும் எதிர்பார்பதாக தெரியவில்லை, திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போட்டு என்ன நடக்க போகிறது மறுபடியும் வந்து கொள்ளை அடிப்பார்கள் …. புதியதாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொழுது அட்லீஸ்ட் தெரு குப்பைய சுத்தம் செய்தால் கூட நமக்கு லாபம் தான், ஏன் என்றால் மற்றவர்கள் அதை கூட செய்வதில்லை.
//யாராவது தலைவராக வந்து நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கும் மன நிலை தான் இது.//
உங்கள் எழுத்தை பார்த்தல் அப்படி தெரியவில்லையே, புதுசா ஒருத்தன் போட்டி இட்டால் கூட, அவனுக்கு சாணி கரைத்து ஊத்தி, அரசியலை விட்டு துரத்துவது போல் அல்லவா உள்ளது,,, இவ்வளவு எழுதும் நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை அல்லது அரசியலில் இருந்தால் மறுமொழில் இடவும்.
//“அவருக்கு நிர்வாகம் செய்ய தெரியும்” என்பது அரசியலுக்கு பொருந்தாது. ஒரு நிறுவனம் என்பது முழுக்க முழுக்க அவருக்கு முழு அதிகாரம் உள்ள ஒரு இடம். ஆனால் அரசியல் என்பது, மற்றவர்களுக்கு பெரும்பாலான அதிகாரம் உள்ள ஒரு இடம். இங்கு அவரது அதிகாரம் செல்லுபடியாகாது. நிர்வாகத் திறமை போதும் என்றால், நாட்டை ஒரு டாடா-விடமோ அல்லது நாராயண மூர்த்தியிடமோ கொடுத்து விடலாமே?//
“அரசியல் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி”ன்னு ஒரு புத்தகம் போடுங்க கண்டிப்பா நா படிச்சி,அதன் படி அரசியலுக்கு வந்து இந்த நாட்ட திருத்துறேன். அப்படியே யார் யார் அரசியலுக்கு வரனம்ன்னு குறிப்பு கொடுத்துடுங்க.
//“முதல்வன்” போன்ற அரைவேக்காட்டுத்தனமான குப்பை திரைப்படங்கள் இது போன்ற மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேத்தியே பணம் சம்பாதிப்பது //
இத ஓரளவுக்கு ஒத்துக்கடலாம்.
//இது போன்ற மூளை சலவையையும் ஜோராக செய்கிறது.//
இத ஒத்துக்கமுடியாது. நீங்களும் வரமாடிங்க அடுத்தவனும் வரக்கூடாது
முக்கியமான விசயம்… தென் சென்னையில யாருக்கு ஒட்டு போடலாம்ன்னு
அரசியல் அறிவுரைகள் சொல்லுற அய்யா நீங்க மறக்காம அறிவுரை சொல்லணும்… மற்ற முப்பத்தி ஒன்பது (புதுவை சேர்த்து) தொகுதிகளிலும் யாருக்கு ஒட்டு போடலாம்ன்னு சொன்னா மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்கும்
“வாழ்க சனநாயகம் “
உண்மை உண்மை உண்மயோ உண்மை. மிக மிக சரியான பதிவு நானும் இதயே நினைதைன்.
சூர்யா
பித்தன் அவர்களே,
ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுடீங்க.. பரவாயில்லை. நாட்டைப் பற்றி நினைக்கிறீங்க என்பதே சந்தோஷமான விஷயம்.
- இது உங்களின் வலைப்பூ பதிவில் நான் கண்ட வார்த்தைகள். இதைத்தான் நானும் விரும்புகிறேன். அதனால் தான் “வெற்றி வாய்ப்புள்ள சிறு பகுதியில் வெற்றி பெற்று உங்கள் ஆர்வத்தை செயலாக காட்டி விடுங்கள்” என்று தான் அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் அவரது வெற்றி மிக முக்கியம். இதைத்தான் “உங்களின் வெற்றி மிக முக்கியம், அதனால் உங்கள் பணியை வெற்றி வாய்ப்புள்ள இடத்திலிருந்து தொடங்க வேண்டுகிறேன்.” என்று எழுதியுள்ளேன்.
– நான் எங்குமே யாருக்கு ஒட்டு போடணும், போடக்கூடாதுன்னு சொல்லவே இல்லையே… ஒரு வேளை எனக்கு எழுதத் தெரியலையா?
– என்ன இது? குப்பையை கூட்ட கூட உங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்றால், அடி மட்ட அரசியல், அதிகார வர்க்கம் எத்தனை மோசமானது? வடிவேல் சொல்லும் “பில்டிங் ஸ்ட்ராங் – பேஸ்மென்ட் வீக்” ஜோக்கா இது? அந்த அடி மட்டத்திலிருந்து தான் வேலை ஆரம்பித்தால் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
- இந்த மன நிலை தவறு என்பது என் தாழ்மையான கருத்து.
– படித்த இளைஞர்கள் தான் நாட்டைத் திருத்தம் முடியும் என்று நானா தகுதி நிர்ணயித்தேன்? என்னங்க நீங்க? நான் ஒரு பொடிப்பையன். டென்ஷன் ஆகாதீங்க.. கொஞ்சம் Service செய்து அனுபவத்தோடு ஒட்டு கேளுங்கன்னு சொல்லுறேன்.
– அரசியல்வாதியை பொது ஜனம் கேள்வியே கேட்க கூடாதுன்னு நினைக்கிறீங்க. இப்ப தான் சரத்பாபு மனுவே தாக்கல் செய்திருக்கிறார். அதுக்குள்ளே நீங்களும் திராவிட கட்சிகள் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்க? இதையே நான் திருப்பி கேட்டால்? அப்படினா நீங்கள் அவரை இறக்கி ஆழம் பார்க்கிறீங்களோ?
நான் இந்த விளையாட்டுகே வரல ஆள விடுங்க..
சப்பா கண்ணை கட்டுதே , வெட்டி பயல் பதிவில் எங்கள் பின்னோடகளை பாருங்க, லக்கி லுக், அதிஷா அங்க மாட்டும் இத அலசி அரஞ்சு துவைத்து காய போட்டாச்சு ….
விடுங்க பித்தன், கண்டு கண்டுகாதிங்க
“பதவியில் இருந்தால் தான் தொண்டு செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்”
மிக நல்ல பதிவு, நானும் இதயே வழி மொழிகிறேன்.
சரத் பாபு தேர்தலில் நிற்பது ஒரு சலனத்தை ஏற்படுத்துமே தவிர வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வது என்பது மிக கடினம் தான், அதலால் மக்கள் பணியை எந்த நிலையிலும் செய முயலவேண்டும் இதுவே மக்களிடத்தில் ஒரு நல்ல அறிமுஅதை ஏற்படுத்தும், மக்களிடத்தில் ஒரு சேவகனாக தன்னை நிருபிதுவிட்டால் தேர்தலில் வெல்வது மிக எளிதக இருக்கும்.
சரத் பாபு டெபொசிட் இழக்காமல் இருந்தாலே மிக பெரிய வெற்றிதான்.
வாழ்க சனநாயகம் ….!
ஆக, ஒன்று தெளிவாக தெரிகிறது….எந்த ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்தாலும், அவர் இப்படி அனாவசியமாக ஊறுகாய் ஆக்கபடுவர் என்பது..
இது மிக வருத்தப்பட கூடிய ஒன்று…
எல்லா வகையிலும் தகுதி உடைய ஒரு வாலிபர், மிக நீண்ட காலங்களுக்கு பிறகு…தமிழக அரசியலில் தென்படும் போது, அதை வரவேற்க முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் ஒதுங்கி கொள்ளுங்கள்…..
நாமும் நல்லது செய்ய நினைக்கிறோம் . ஆனால் முடிய வில்லை . குடும்ப சூழ்நிலை காரணமாக ஒதுங்கி நிற்கிறோம்..குறைந்த பட்சம் இவ்வாறு வருபவர்களை ஆதரவு செய்யலாமே…அல்லது குறை கூராமலவது இருக்கலாமே?