ஆகஸ்ட் 15 2004,
10:24 அன்று
மக்குசாமி,
மற்றவை என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
இன்று இந்திய சுதந்தரநாள்! நேற்று சென்னை கன்னிமரா நூலகத்தின் பின்புறம் உள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இதுபோன்ற ஒரு முயற்சிக்கு அரசுக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். அதுவும் குறிப்பாக அந்த காட்சியகத்தின் தலைமை அலுவலர்! நான் தேடிய புத்தகம் ஒன்று கிடைக்கவில்லை (ஜெயமோகனின் விஷ்ணுபுரம்). அந்த தலைமை அலுவலர், சிரத்தையெடுத்து பல பதிப்பகங்களுக்குத் தொலைபேசி மூலம் பேசி, அடுத்த வாரம் அந்த புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இப்படிப்பட்ட கடமையுணர்வு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. [...]
ஜூன் 5 2004,
16:18 அன்று
மக்குசாமி,
மற்றவை என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
அனைவருக்கும் வணக்கம்! என் இனிய நண்பர்களே! என் நீண்ட நாளைய எண்ணமான என் கருத்துக்களைப் பதிவு செய்யும் களம் இன்று நிறைவேறுகிறது. எண்ணங்களைப் பதிவு செய்வது மனதிலுள்ள குப்பைகளை அகற்றுவது போலத் தான். எண்ணங்கள் எழுத்தில் வரும்பொழுது அது அதிக முக்கியத்துவமும் பெற்றுவிடுகிறது. நமது சிந்தனையைத் தூண்டி சில நேரம் எழுதவந்த கருத்தை மறு பரிசீலனை செய்யக்கூட வைத்துவிடுகிறது. அதுவே இந்த வலைப்பூவின் சாதனை எனக்கூட சொல்லலாம். இங்கு நான் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றியே பேசப்போகிறேன். அந்த [...]