நள்ளிரவில் சுதந்தரம்…
மீண்டும் ஒரு பெரிய இடைவெளி…..! ஒரு வழியாக “நள்ளிரவில் சுதந்தரம்” படித்து முடித்து விட்டேன். “ஒரு வழியாக” என்பது சலிப்பாக சொல்லும் வார்த்தை அல்ல. ஒரு பூரணமான நூலைப் படித்து முடிக்க எடுத்துக்கொண்ட கால அளவை சொல்லுவது அது! நூலில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் இங்கிலாந்திடமிருந்து இந்தியாவுக்கு கை மாறிய அந்த கால கட்டத்தை (1946-1948) அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது. இந்த நூலாசிரியர்களின் (ஆங்கில மூலம்: டொமினிக் லேப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் [...]